News April 5, 2025
பணம் இரட்டிப்பு மோசடி: போலீசார் எச்சரிக்கை!

சேலம் அம்மாப்பேட்டையில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில், பொது மக்களிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்டு 4 பேர் கைதான நிலையில், பணம் கட்டியவர்களுக்கு திருப்பி தருவதாக வாட்ஸப் மூலம் ஏஜெண்டுக்கள் பரப்பி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், இது குற்றவாளிகளுக்கு சாதகமாக திருப்ப செய்யும் சூழ்ச்சி எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 8, 2025
ஏரியில் குளிக்கச் சென்ற சிறுவன் பலி !

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரியில் இன்று (ஏப்.8) தனது நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார். சிறுவனின் நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News April 8, 2025
ஏப்.10-ல் இறைச்சிக் கடைகள் செயல்படாது!

“மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 10- ஆம் தேதி அன்று சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு உத்தரவின்படி, இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக்கூடாது அன்றைய தினம் சிறப்பு குழுக்கள் 4 மண்டலங்களிலும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். விதியை மீறும் இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை”- சேலம் மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை!
News April 8, 2025
பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி

சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் உள்ள ஆர்.ஆர்.திருமண மண்டபத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சியின் கால அளவு 30 நாட்கள்; தேநீர், உணவு மற்றும் பயிற்சி உபகரணங்களுடன் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 19 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம். விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி ஏப்.09 ஆகும். மேலும் – தொடர்புக்கு 75503-69295, 95666-29044 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.