News April 3, 2024
பங்குனித் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு

திருப்பத்தூா் அருகே குமாரப்பேட்டையில் உள்ள பூமலச்சியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, கிராம பொதுமக்கள் பூமலச்சியம்மன் கோயிலில் அபிஷேக, ஆராதனைகளை மேற்கொண்டு ஊா்வலமாக மஞ்சுவிரட்டு தொழுவுக்கு வந்தனா். அங்கிருந்த காளைகளுக்கு மாலை, வேட்டி அணிவித்து மரியாதை செய்தனா். தொழுவிலிருந்து 50 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன .
Similar News
News April 14, 2025
சிவகங்கை: விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய விவசாய அட்டை பதிவிற்கான தேதி நாளையுடன் (15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்ய முடியவில்லை எனில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். *SHARE*
News April 14, 2025
குவாரி அமைக்க விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் குவாரி குத்தகை கோரும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சுரங்க நிலுவை தொகை சான்றிதழ் (Mining Dues clearance Certificate) கோரும் விண்ணப்பதாரர்கள் வரும் 28-ஆம் தேதி முதல் mimas.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று (ஏப்.13) தெரிவித்துள்ளார். SHARE!
News April 14, 2025
தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் நடவடிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற மே மாதம் 15ஆம் தேதிக்குள் அனைத்து விதமான கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் வணிகர்கள் தங்களது நிறுவனங்களில், தமிழில் பெயர் பலகையினை வைத்து பராமரித்திடல் வேண்டும். வைக்கப்படாத கடைகள் மற்றும் நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.