News April 21, 2025

பக்ரைன் நாட்டில் உயிரிழந்த இராம்நாடு மீனவர்

image

பாம்பன் காமராஜர் நகரை சேர்ந்த சீமோசன்(33) என்பவர் மீன்பிடி தொழிலுக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பக்ரைன் நாட்டிற்கு சென்ற நிலையில் நேற்று முன்தினம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு செல்சியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். எனவே உயிரிழந்த மீனவர் உடலை சொந்த ஊர் கொண்டுவர அவரது மனைவி தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News April 21, 2025

ராம்நாடு எம்.பி மனு தள்ளுபடி

image

இராமநாதபுரம் எம்பி நவாஸ்கனியின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இன்று ஏப்.21 பன்னீர் செல்வத்தின் தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டுமென நவாஸ்கனி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கார்த்திகேயன்,  நவாஸ்கனியின் மனுவை தள்ளுபடி செய்து ஜூன்.16 தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

News April 21, 2025

குறைதீர் நாள் கூட்டத்தில் 499 பேர் கோரிக்கை மனு

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகள் குறித்து 499பேர் மனு அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, துணை ஆட்சியர் (பயிற்சி) கோகுல்சிங், சமூக பாதுகாப்புத்திட்டம் தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News April 21, 2025

இராமநாதபுரம் மாவட்ட வட்டாட்சியர்கள் அலுவலக எண்கள்

image

இராமநாதபுரம் மாவட்ட பகுதிகளின் வட்டாட்சியர்கள் தொலைபேசி எண்கள்
கடலாடி – 04576-266558
கமுதி – 04576-223235
முதுகுளத்தூர் – 04576-222223
பரமக்குடி – 04564-226223
ஆர்.எஸ் மங்கலம் – 04561-299699
திருவாடனை – 04561-254221
கீழக்கரை – 04567-241255
இராமேஸ்வரம் – 04573-221252
தாசில்தார் இராமநாதபுரம் – 04567-220352
பிறரும் பயன் பெற *SHARE* பண்ணுங்க

error: Content is protected !!