News December 4, 2024

பகவதி அம்மன் கோவில் இடம் விவகாரம்; உயர்நீத மன்றம் அதிரடி

image

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 45 சென்டு இடத்தை பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்து அறநிலையத்துறை கன்னியாகுமரி பேரூராட்சியிடம் ஒப்படைத்தது. இதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் கோயிலுக்கு சொந்தமான இடம் பேரூராட்சிக்கு ஒதுக்கப்பட்டதற்கு மதுரை உயர்நீதி மன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது.

Similar News

News August 9, 2025

தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேர சேவை

image

குமரி அஞ்சல் கோட்டகண்காணிப்பாளர் செந்தில் குமார் இன்று வெளியிட்ட செய்தியில், நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் வருகிற 11-ம் தேதி முதல் பதிவு, விரைவு பார்சல் தபால்களுக்கு 24 மணி நேர முன்பதிவு வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் எந்த நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் தபால் சேவை பெரும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், மூன்று சீட்டு அடிப்படையில் கவுண்டர் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

News August 8, 2025

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய டீன் நியமனம்

image

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி டீனாக லியோ டேவிட் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வராக பணியாற்றி வந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஆக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அங்கிருந்து கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக மாற்றப்பட்டுள்ளார்.

News August 8, 2025

குமரி: படகு சேவைக்கு ஆன்லைன் மூலம் பயண சீட்டு!

image

குமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இணைய வழி படகுபயணசீட்டு வசதி தொடக்க விழா இன்று(ஆக.8) நடந்தது. இதில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு இணைய வழி சேவையை தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் அழகு மீனா, உணவு ஆணையத்தலைவர் சுரேஷ்ராஜன், மேயர் மகேஷ், பொது மேலாளர் தியாகராஜன், மேலாளர் முருக பூபதி, நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உட்பட திமுக பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!