News April 24, 2024
நெல்லையில் தேதி அறிவிப்பு

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நெல்லை பிரிவு சார்பில் பாளை அண்ணா விளையாட்டு அரங்கம் மற்றும் சீவலப்பேரி ரோடு நீச்சல் குளத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு மூன்று கட்ட நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் மே 2ஆம் தேதி தொடங்குகிறது. பயிற்சி கட்டணம் ரூ.1770. விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார் – 74017035 06 என்ற என்னில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 30, 2025
ஜெயக்குமார் எழுதிய கடிதம் என்னாச்சு? குற்றாலநாதன் கேள்வி

நெல்லையை சேர்ந்த இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் நேற்று (ஏப்.29) வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவதாக சட்டசபையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை நடந்து ஒரு வருடமாகிறது. ஒரு குற்றவாளி கூட கைது இல்லை. ஜெயக்குமார் கடைசியாக எழுதியதாக கடிதம் வெளியானது என்னாச்சு? என கூறியுள்ளார்.
News April 29, 2025
திருநெல்வேலி சங்க தேர்தல் ரத்து

திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நாளை நடைபெற இருந்தது. இதில் பல்வேறு குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர்கள் ஸ்ரீமதி, நிஷா பானு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சங்க தேர்தல் ரத்து செய்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இதனால் வழக்கறிஞர்கள் ஏமாற்றமடைந்தனர்
News April 29, 2025
BREAKING நெல்லை டவுனில் வருமான வரித்துறை சோதனை

திருநெல்வேலி டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் காஜா பீடி நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமானவரித்துறையினர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பிரிவினர் இங்கே சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் மற்றொரு பிரிவினரும் வேறு இடங்களில் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.