News April 5, 2025

நெல்லையில் தாது மணல் ஆலைகளில் சிபிஐ திடீர் சோதனை

image

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கீரைக்காரன்தட்டு கிராமத்தில் உள்ள விவி மினரல்ஸ் தாது மணல் ஆலைகள் மற்றும் அதன் தலைமை அலுவலகம் மற்றும் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அலுவலகத்தில் பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, ஐகோர்ட் உத்தரவுப்படி 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News April 12, 2025

பாஜக மாநிலத் தலைவரானார் நயினார் நாகேந்திரன்

image

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பாஜக தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்த நிலையில் இவருக்கு மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்ய கட்சி தலைமை அனுமதி வழங்கியது. இதன் மூலம் தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவரானார் நயினார் நாகேந்திரன். அதற்கான சான்றிதழை கட்சி அவருக்கு வழங்கியது.

News April 12, 2025

மணிமேகலை விருது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் கிராம, ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவைகளில் இருந்து மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9444094357 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News April 12, 2025

டென்னிஸ் பயிற்சி மையம் மாணவர்களுக்கு அழைப்பு

image

நெல்லை மாவட்டத்தில் ஸ்டார் அகடாமி டென்னிஸ் பயிற்சி மையம் வரும் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் 20 மாணவர்கள், 20 மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். 12 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். இதற்கான தேர்வு வரும் 28ம் தேதி நடக்கிறது. தகுதியின் அடிப்படையில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.

error: Content is protected !!