News April 27, 2025

நெல்லையில் ஒரு வழிபாதையாக மாற்றப்பட்ட சாலை

image

நெல்லை சந்திப்பிலிருந்து சமாதானபுரம் வழியாக கேடிசி நகர் செல்ல இன்று முதல் முடியாது. சமாதானபுரத்திலிருந்து கோர்ட் வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சமாதானபுரத்திலிருந்து எஸ்.பி அலுவலகம் வழியாக கேடிசி நகர் செல்லலாம். கேடிசி நகரில் இருந்து சமாதானம் வருவதற்கு எந்த தடைகளும் கிடையாது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர். *ஷேர் பண்ணுங்க

Similar News

News April 27, 2025

நெல்லை கோர விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தளபதி சமுத்திரம் நான்கு வழிச்சாலையில் இன்று மாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News April 27, 2025

நெல்லையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 4 பேர் பலி 

image

நெல்லை மாவட்டம் நான்குநேரியை அடுத்த தளபதிசமுத்திரம் அருகே நான்கு வழிச்சாலையில் இரண்டு கார்கள் இன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் குழந்தை உள்பட4 பேர் பலியானதாக கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு ஏர்வாடி போலீசார் விரைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

News April 27, 2025

மயோனைஸ் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை -ஆட்சியர்

image

நெல்லை கலெக்டர் சுகுமார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தந்தூரி சிக்கன், சவர்மா போன்ற உணவுகள் இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்துள்ளது. அதில் பயன்படுத்தப்படும் மயோனைஸ் கேடு விளைவிப்பதாக அதனை ஒரு ஆண்டுக்கு விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.எனவே உணவு நிறுவனங்கள் அதன் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!