News April 3, 2024
நெல்லையில் இன்று வெயில் கொளுத்தும்
திருநெல்வேலி தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (ஏப்ரல் 3) விடுத்துள்ள அறிக்கை: நெல்லையில் வெயில் கொளுத்தும்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக 100°F வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும் எனக் கூறியுள்ளார்.
Similar News
News November 20, 2024
நெல்லையில் மழை தொடரும்!
நெல்லை உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
News November 20, 2024
நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நெல்லை மாவட்டத்தில் விடிய, விடிய தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று(நவ.,20) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்படும் சூழல் உள்ளதால் பாதுகாப்பாக இருக்கவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News November 19, 2024
நெல்லை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் அடிஉரம் மற்றும் பிற உரங்கள் பெற அடங்கல் சான்று கட்டாயம் என்ற தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. உரங்கள் பெற ஆதார் கார்டு மட்டுமே போதுமானது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் வேளாண்மை துறை அலுவலர்களை 04622572514 என்ற தொலைபேசி எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என வேளாண்மை இணை இயக்குநர்(பொ) கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.