News April 6, 2025
நெல்லையில் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை

திருநெல்வேலியில் தனியார் நிறுவனத்தில் “பாதுகாப்பு அதிகாரி” பணிக்கு ரூபாய் 15,000 முதல் 25,000 சம்பளம் வரை வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஏதாவது ஒரு டிகிரி படித்திருந்தால் இந்த வேலைக்கு போதுமானது. முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News April 14, 2025
நெல்லை எம்.பி ராபர்ட் ப்ரூஸ் நாளைய சுற்றுப்பயணம் விபரம்

திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நாளை (ஏப்.15) கன்னியாகுமரியில் நடைபெறும் லொயோலா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காலை 10 மணி அளவில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து பாளை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் மதியம் 2 மணி அளவில் கலந்து கொள்கிறார்.
News April 14, 2025
நெல்லை: விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய விவசாய அட்டை பதிவிற்கான தேதி நாளையுடன் (15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்ய முடியவில்லை எனில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். *SHARE*
News April 14, 2025
வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றி – பாஜக தலைவர்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து நேற்று நெல்லை வந்த அவரை பொதுமக்கள் கட்சியினர் சிறப்பாக வரவேற்றனர். இதற்கு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் அளித்த அமோக வரவேற்பு என்னை நெகிழ்ச்சியடையச் செய்தது. மாபெரும் வரவேற்பளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது அன்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்