News September 28, 2024
நெல்லையில் 103 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு

நெல்லையில் நேற்று(செப்.27) 103 பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மதியம் அனல் காற்று வீசியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயில் காரணமாக குளிர் பானங்கள் மற்றும் பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இளநீர், நுங்கு மற்றும் பழங்களின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வெயிலால் பொதுமக்கள், மாணவிகள் குடைகளுடன் செல்வதை காண முடிந்தது.
Similar News
News August 9, 2025
ராதாபுரம் இளைஞர் கொலை – குற்றாவளிகள் வாக்குமூலம்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சங்கநேரியை சேர்ந்த பிரபுதாஸ் கோயம்புத்தூரில் வேலை செய்த போது, எங்களது உறவினர் பெண் தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்தார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். கடந்த 6ம் தேதி பிரபுதாஸை பின் தொடர்ந்தோம் தொடர்ந்து பைக்கில் சென்ற போது அவரை வழிமறித்துக் கொலை செய்தோம் என கைதானவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
News August 9, 2025
சென்னைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு

சுதந்திர தின கொண்டாட்டம் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக திருநெல்வேலி வழியாக செங்கோட்டை சென்னைக்கு சிறப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு சிறப்பு ரயில் நாகர்கோயிலில் இருந்து நெல்லை வழியாக வருகிற 17-ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 06012) புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் என தெரிவிக்கபட்டுள்ளது. வள்ளியூருக்கு இரவு 11:25 மணிக்கு வரும்.
News August 9, 2025
நெல்லை: வாகனங்கள் FINE-ஐ நினைச்சு இனி NO FEEL!

நெல்லை மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <