News March 30, 2025
நெல்லை அருகே மருத்துவக் கழிவுகள் – 4 பிரிவுகளில் வழக்கு

நெல்லை அருகே மருத்துவக்கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் குப்பைகளை கையாளும் தனியார் நிறுவனத்தினர் திறந்தவெளியில் தீயிட்டு எரித்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிஎன்எஸ் 329, 271, 272 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 12(1) உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Similar News
News April 11, 2025
நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராவதில் சிக்கல்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அண்ணாமலைக்கு பின்னர் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. தற்போது பாஜக மாநில தலைவருக்கு புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பத்தாண்டுகள் பாஜக உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற நிலையில் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்து 7 ஆண்டுகள் ஆவதால் மாநிலத் தலைவராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
News April 10, 2025
119 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள்

நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் சத்துணவு மையங்களில், 119 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு தகுதியான பெண்கள், வரும் 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இதற்கான மாதிரி விண்ணப்ப படிவம் www.tirunelveli.nic.in மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News April 10, 2025
நெல்லை: ம.சு பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் புகார்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதிலிருந்து தற்போது கல்லூரியில் வேலை செய்யும் வரை தொடர்ந்து பாலியல் ரீதியான துன்புறுத்தலை வேதியியல் துறை பேராசிரியர் கொடுப்பதாக தற்காலிக பேராசிரியர் ஒருவர் மாநில மகளிர் ஆணையத்திற்கும் உயர்கல்வி துறைக்கும் மனு அனுப்பியுள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து பல்கலைக்கழகம் விசாரிக்க தமிழக உயர் கல்வி மன்றம் உத்தரவிட்டுள்ளது.