News October 24, 2024
நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு வைகோ மனு!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ .வேலுவிற்கு நேற்று(அக்.,23)அனுப்பியுள்ள மனுவில், பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி சந்தை அருகில் செல்லும் சாலை ஊராட்சி ஒன்றிய சாலையாகும். அதிக போக்குவரத்துக் கொண்ட சாலையாக இருப்பதால் சாலை பணிகள் நடைபெற்று ஓரிரு ஆண்டுகளிலேயே மிகவும் பழுதடைந்துவிட்டது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
Similar News
News August 5, 2025
தென்காசி மக்களே… மாதம் ரூ.3000 ஓய்வூதியம் பற்றித் தெரியுமா?

தென்காசி அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் கருதி மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டம் தான் இந்த “பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்” (PM-SYM). இதில் சந்தாதாரர் 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3,000-யை குறைந்தபட்ச ஓய்வூதியமாகப் பெறுவதை உறுதி செய்கிறது. கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், ஓட்டுநர்கள் போன்ற பல அமைப்புசாரா தொழிலாளர்கள் <
News August 5, 2025
தென்காசி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. ஆகஸ்ட்.7-ல் விடுமுறை!

தென்காசி: சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா வரும் ஆகஸ்ட்.7ம் தேதி வியாழன் அன்று நடைபெற இருப்பதால், தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி, மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக (23.08.2025) சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 4, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஆக.4) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளது.