News March 28, 2024
நூதன முறையில் வாக்கு சேகரித்த ஐ. பெரியசாமி!

திண்டுக்கல் ஒன்றியம் பள்ளப்பட்டி ஊராட்சி முருகபவனம் பகுதிகளில் நேற்று சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிக்க பிரச்சாரத்தில் புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம் என்றார்.
Similar News
News August 5, 2025
திண்டுக்கல் உழவர் சந்தை காய்கறி நிலவரம்

திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்றைய (05.08.25) காய்கறி விலை நிலவரம்
கத்தரிக்காய் ரூ.66-100
தக்காளி ரூ.50-46
வெண்டைக்காய் ரூ.40-50
புடலை ரூ. 20-50
அவரைக்காய் ரூ.80-90
பச்சை மிளகாய் ரூ.60-90
முள்ளங்கி ரூ.20-26
உருளைக்கிழங்கு ரூ.40
முட்டைக்கோஸ் ரூ.30
கேரட் ரூ.80
பீட்ரூட் ரூ.30-60 வரை விற்பனை செய்யப்படுகிறது.
News August 5, 2025
திண்டுக்கல்: கிணற்றில் மூழ்கி இளைஞர் பலி

திண்டுக்கல்: என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா(20). செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த இவர், நண்பர்களுடன் குளிப்பதற்காக குஜிலியம்பாறை ரோடு தனியார் கல்லூரி அருகே உள்ள கிணற்றுக்கு சென்றார். நீச்சல் தெரியாததால் இடுப்பில் கயிறுக்கட்டிக்கொண்டு கிணற்றின் ஓரமாக அமர்ந்து குளித்திருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அவிழ்ந்ததில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News August 5, 2025
திண்டுக்கல்: தேர்வின்றி அரசு வேலை! உடனே APPLY

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு தொடக்கநிலை மற்றும் புத்தாக்கத் திட்டம் (TANSIM) மூலம், StartupTN திட்டத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்ப்படும். இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12ஆம் தேதிக்குள், https://startuptn.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.