News April 5, 2025
நுரையீரலில் இருந்து அகற்றப்பட்ட விதை

தேனி அரசு மருத்துவமனைக்கு கடந்த வாரம் வட வீரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜக்கம்மாள் (50) மூச்சுத் திணறல் மற்றும் இருமல் காரணமாக புற நோயாளியாக நுரையீரல் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கட்டி போன்று இருப்பதை ஆப்பரேஷன் செய்ததில் ஆச்சரியப்படும் விதமாக அது சப்போட்டா பழத்தின் விதை என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 வருடங்களாக இருந்த விதை மருத்துவர்களால் அகற்றப்பட்டது.
Similar News
News April 8, 2025
தேனி மாவட்ட மக்களுக்கு தெரிய வேண்டிய எண்கள்

தேனி மாவட்ட ஆட்சியரக உதவி எண்-04546 –254956,254946,255410, ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை -1077, மாநில கட்டுப்பாட்டு அறை-1070, போலீஸ் கட்டுப்பாட்டு அறை-100, விபத்து உதவி-108, தீயணைப்பு உதவி-101, ஆம்புலன்ஸ் உதவி-102, குழந்தை பாதுகாப்பு-1098, பாலின துன்புறுத்தல்-1091 *மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கு பகிரவும்
News April 8, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய(ஏப். 08) நீர்மட்டம்: வைகை அணை: 56.89 (71) அடி, வரத்து: 516 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 493 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 33.60 (57) அடி, வரத்து: 71 க.அடி, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 91.02 (126.28) அடி, வரத்து: 26.26 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 35.80 (52.55) அடி, வரத்து: 12 க.அடி, திறப்பு: இல்லை.
News April 8, 2025
சோலார் பேனல் பொருத்துதல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஏப்.21 முதல் 6 நாட்களுக்கு சோலார் பேனல் பொருத்துதல், பழுதுநீக்குதல் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நலத்துறை அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம். அல்லது 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.