News April 10, 2025

நீலகிரி மக்களே.. லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க!

image

நீலகிரி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பிறருக்கு சேவைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற நேரடியாகவோ, கூகுள் பே (GPay), போன்பே (Phonepe), பேடிஎம் (Paytm) போன்ற டிஜிட்டல் முறைகளிலோ, வேறு எந்த வகையிலோ லஞ்சம் கேட்டாலும் DSP ஜெயக்குமார்-94981 47234 சண்முகவடிவு (Inspector): 94981 24373  உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News April 19, 2025

குன்னூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் கைது!

image

குன்னூரை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர், தனது குடும்பத்தினருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். இதனிடையே அவரது 16 வயது பேத்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில், சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. இது குறித்து விசாரித்ததில், முதியவர் சிறுமியை கர்ப்பமாக்கியது தெரிந்தது. பின்னர் முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

News April 19, 2025

நீலகிரி மாவட்டம் முழுவதும் நெகிழி சேகரிக்கும் பணி!

image

நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், அரசு மாணவர் விடுதிகள், வனப்பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும், நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில், மாவட்ட எஸ். பி. நிஷா, கூடுதல் கலெக்டர் கவுசிக், வன அலுவலர் கவுதம் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்று, நெகிழி சேகரிப்பில் இன்று காலை 8 மணி முதல் ஈடுபட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 18, 2025

நீலகிரி: பைக் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு 

image

நீலகிரி மாவட்டம் உதகை – குன்னூர் நெடுஞ்சாலையில் பாய்ஸ் கம்பெனி பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், சேரம்பாடி பகுதியை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்னொருவர் குன்னூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து அருவங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!