News March 22, 2024
நீலகிரி தொகுதியில் இதுவரை மனுதாக்கல் இல்லை

மக்களவை தேர்தல் அறிவிப்பை அடுத்து, இதற்கான வேட்பு மனு தாக்கல் புதன் கிழமை தொடங்கியது. வேட்பு மனு தாக்கலை ஒட்டி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஆனால் சுயேச்சை வேட்பாளர் உட்பட அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும் 2வது நாளான நேற்றும் (மார்ச் 21) மனு தாக்கல் செய்யவில்லை.
Similar News
News April 21, 2025
நீலகிரி: வேலைவாய்ப்பு தரும் கோயில்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தந்தி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. அம்பாளுக்கு கோயில் கட்டியபோது ஆங்கிலேயர்கள் ‘தந்திக்கம்பம்’ ஒன்றினை இவ்விடத்தில் நட்டனர். இதனால், இங்கிருக்கும் அம்பாள் ஆதியில் தந்தி மாரியம்மன் என்ற திருப்பெயரில் அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் அப்பெயரே நிலைத்து விட்டது. இங்கு வந்து வழிபட்டால் திருமண வாரமும், நல்ல வேலை வாய்ப்பும் அதிவிரைவில் கிடைக்கிறது என்பது பக்தர்கள் நம்பிக்கை.
News April 21, 2025
நீலகிரி: முக்கிய அரசு அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

▶️ நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் 0423-2441233. ▶️மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) 0423-2444012. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0423-2441216 ▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 0423-2444004. ▶️முதன்மை கல்வி அலுவலர் 0423-2443845. ▶️வருவாய் கோட்டாட்சியர், உதகை 0423-2445577. ▶️வருவாய் கோட்டாட்சியர், குன்னூர் 0423-2206002. ▶️வருவாய் கோட்டாச்சியர், கூடலூர் 04262-261295. இதை SHARE பண்ணுங்க.
News April 21, 2025
நீலகிரி: ரேஷன் கடையின் கதவை உடைத்த யானை

நீலகிரி, தேவர் சோலை காவல் நிலையம் பின்புறம் உள்ள தேயிலைத் தோட்ட கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வந்த காட்டு யானை, கடையின் ஷட்டரை இடித்து தள்ளி, ரேஷன் பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. இந்தக் கடையினை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் யானையிடமிருந்து பாதுகாக்க, கம்பிகளால் ஆன வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.