News April 13, 2025
நீலகிரி: சிறுத்தை, கருஞ்சிறுத்தை ஒரே இடத்தில் உலா

உதகை, குளிச்சோலை பகுதியில் கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தை இரண்டும் ஒன்றாக உலா வந்தன. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீருக்காக, குடியிருப்பு பகுதியை நோக்கி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கருஞ்சிறுத்தை, சிறுத்தை ஒரே இடத்தில் உலா வந்தது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 21, 2025
நீலகிரி: முக்கிய அரசு அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

▶️ நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் 0423-2441233. ▶️மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) 0423-2444012. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0423-2441216 ▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 0423-2444004. ▶️முதன்மை கல்வி அலுவலர் 0423-2443845. ▶️வருவாய் கோட்டாட்சியர், உதகை 0423-2445577. ▶️வருவாய் கோட்டாட்சியர், குன்னூர் 0423-2206002. ▶️வருவாய் கோட்டாச்சியர், கூடலூர் 04262-261295. இதை SHARE பண்ணுங்க.
News April 21, 2025
நீலகிரி: ரேஷன் கடையின் கதவை உடைத்த யானை

நீலகிரி, தேவர் சோலை காவல் நிலையம் பின்புறம் உள்ள தேயிலைத் தோட்ட கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வந்த காட்டு யானை, கடையின் ஷட்டரை இடித்து தள்ளி, ரேஷன் பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. இந்தக் கடையினை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் யானையிடமிருந்து பாதுகாக்க, கம்பிகளால் ஆன வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News April 20, 2025
நீலகிரியில் குறைகளைக் களையும் குமரன்!

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்துள்ளது அன்னமலை முருகன் கோயில். குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியுள்ள தமிழ் கடவுளான முருகப் பெருமான், கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார். உதகையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. பக்தர்களின் பிரார்த்தனை, குறைகளை களையும் வகையில் இத்தலத்தில் தண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார். SHARE செய்யவும்.