News March 25, 2024

நீலகிரி: காட்டு தீ – போராடிய தீயணைப்பு துறை

image

உதகை நகரில் மேல் தலையாட்டு மந்து என்ற இடத்தின் அருகே  மூலநகர்  பகுதி காட்டில்  இன்று பகல் ஒரு மணியளவில் காட்டு தீ ஏற்பட்டது . காய்ந்து கிடந்த செடி, கொடிகளில் எரிந்த தீ காற்றின் வேகம் காரணமாக மரங்களில் பரவியது . தகவலறிந்த, உதகை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய குழுவினர் விரைந்து சென்று இரண்டு மணி நேரம் போராடி காட்டு தீயை அணைத்தனர் .

Similar News

News April 20, 2025

அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் 67 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 20, 2025

நீலகிரி: சாலை விபத்தில் ஒருவர் பலி!

image

நீலகிரி, நிலக்கோட்டை, சுல்தாம்பத்தேரி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மாலை கேரள மாநிலம் தலச்சேரியை சேர்ந்த 2 இளைஞர்கள் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த அரசு பேருந்தில், பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும், மற்றவர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து, நிலக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 19, 2025

தீராத நோயை தீர்க்கும் கோத்தகிரி கோயில்!

image

நீலகிரி, கோத்தகிரி அருகே பிரசித்தி பெற்ற வெற்றிவேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக வெற்றிவேல் முருகன் இடது பாகத்தில் மயில் பீலியுடன் அபூர்வமாக வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் தீராத நோய், குடும்ப பிரச்சனை, நீதிமன்ற வழக்கு போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. குடும்ப பிரச்சனையில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!