News April 15, 2024
நீச்சல் தெரியாமல் கிணற்றில் குளித்த இருவர் பலி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கிணற்றில் இன்று காலை சுடலைமணி, மகாராஜன் ஆகிய 2 பேர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2025
நெல்லை – டெல்லி சிறப்பு ரயில் நாளை இயக்கம்

நெல்லையிலிருந்து நாளை இரவு 10.15-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06161), அதிகாலை 2 மணிக்கு தில்லி சென்றடையும். இதில் படுக்கை வசதியுள்ள 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், கூடூர், டெல்லி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும். *ஷேர் பண்ணுங்க
News April 20, 2025
நெல்லை: சின்னத்துரையை தாக்கிய இருவர் சிக்கினர்

நாங்குநேரியில் ஜாதி வன்மத்தால் தாக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை மீது சமீபத்தில் மீண்டும் தாக்குதல் நடைபெற்றது. மர்ம நபர்கள் இன்ஸ்டாகிராமில் பழகி அவரை கொக்கிரகுளம் வசந்தம் நகர் பகுதிக்கு வரவழைத்து தாக்கியது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் பாளையங்கோட்டை போலீசார் இன்று சங்கரநாராயணன் சக்திவேல் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாகவும் மேலும் இருவரை தேடி வருவதாகவும் மாநகர காவல் துறை இன்று தெரிவித்துள்ளது.
News April 19, 2025
நெல்லை: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*