News April 16, 2024
நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறை அளிக்காத தனியாா் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி எச்சரித்துள்ளார். இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண். 18004257015 04172 -273190, 04172-273191, 04172-273192, 04172 -273193 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு மக்கள் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 8, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் 08) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
News August 8, 2025
ராணிப்பேட்டை: மாரத்தான் போட்டி அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் கலாம் கனவு அறக்கட்டளை சார்பில் வருகின்ற ஆகஸ்ட்-15 மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய ஆகஸ்ட் 9 முதல் 13 வரை ஒதுக்கப்பட்டுள்ளது, பதிவு கட்டணம் 200 ரூபாய் என அறிவிப்பு. வயது வரும்போது 18 வயது முதல் 35 வரை நிர்வாகம் அறிவிப்பு மூன்று பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.
News August 8, 2025
ராணிப்பேட்டை: கடன் பிரச்சனை இருக்கிறதா…? உடனே இங்கு போங்க

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் பிரசித்தி பெற்ற ஜலநாதீசுவரர் கோயில் அமைந்துள்ளது. கடன் தொல்லை உள்ளவர்கள் அமாவாசைக்கு அடுத்த நாள் இந்த இறைவனை தரிசனம் செய்தால் கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், தொழில் தொடங்க நினைப்பவர்களும் இங்கு வந்து தரிசித்தால் தொழில் வெற்றி அடையும் என்பது ஐதீகம். கடனில் இருந்து மீள உங்க நண்பர்களுக்கு பகிரவும்.