News March 25, 2025
நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம்

மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய +2 பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது. இதனால், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதலே கோடை விடுமுறை தொடங்குகிறது. அதேபோல், நாளை மறுநாளுடன் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவடைவதால், அவர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாட, இப்போதே வெளியூர் பயணத் திட்டம் குறித்து ஆலோசனை செய்யுங்கள்..
Similar News
News March 29, 2025
இன்னும் 2 நாள்கள் மட்டுமே… உடனே செய்யுங்கள்

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க e-KYC செய்வதற்கு மார்ச் 31 தான் கடைசி நாளாகும். இதை செய்யத் தவறினால், ரேஷனில் பொருள்கள் வாங்க முடியாமல் போகும். உங்கள் ரேஷன் கார்டு டி-ஆக்டிவேட் செய்யப்படலாம் (அ) ரத்து செய்யப்படலாம். ஆகவே, இதுவரை ஆதார் எண் இணைக்காதவர்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று செய்யலாம். இ-சேவை மையங்கள் அல்லது வீட்டிலிருந்தே இணையம் மூலமாக ஆன்லைனிலும் e-KYC அப்டேட் செய்யலாம்.
News March 29, 2025
ஆன்லைனில் e-KYC செய்யும் வழிமுறை

*மாநில ரேஷன் கார்டு போர்ட்டலில் (https://www.tnpds.gov.in/) லாக்-இன் செய்யவும். *உங்கள் ரேஷன் கார்டு எண், பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழையவும். *e-KYC விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். “Aadhaar Linking” (அ) “e-KYC Update”-ஐ கிளிக் செய்து விவரங்களை அளிக்கவும். *அதன்பின் வரும் OTP-ஐ உள்ளிட்டு, போட்டோ, ஆவணங்களை அப்லோட் செய்து e-KYC-ஐ சமர்ப்பிக்கவும். வெற்றிகரமாக Submit செய்தபின் உங்களுக்கு மெசேஜ் வரும்.
News March 29, 2025
இதுதான் மிக வேகமான அரைசதம்

முதல் ஒருநாள் போட்டியிலேயே மிக வேகமாக அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமையை நியூசிலாந்தின் முகமது அபாஸ் பெற்றிருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில், அவர் 24 பந்துகளில் அரைசதம் கடந்தார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவரான முகமது அபாசுக்கு வெறும் 21 வயதுதான் ஆகிறது. முன்னதாக, இந்தியாவின் க்ருனால் பாண்டியா (26 பந்துகள்) இந்த சாதனையை தன்வசம் கொண்டிருந்தார்.