News April 27, 2025
நாமக்கல்லில் பாஜகவினர் கைது !

நாமக்கல்: சேத்தமங்களம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி பஸ் ஸ்டாப்பில் பாஜக சார்பில் காஷ்மீர் தாக்குதலை கண்டித்து பேனர் வைக்கப்பட்டது. அந்த பேனரில் சில சர்ச்சைக்குறிய வாசகங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்நிலையில், அப்பகுதி போலீசார் அந்த பேனரை அகற்றி செந்தில் குமரன், இளங்குமரன் ஆகிய பாஜகவினரைக் கைது செய்தனர்.
Similar News
News April 27, 2025
நாமக்கல் : முட்டை விலை 10 பைசா உயர்வு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (எப் 27) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.20 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
News April 27, 2025
நாமக்கல்: ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

ராசிபுரம் அடுத்து அத்திப்பலகானூர் அருகே ரயிலில் இருந்த பயணி ஒருவர் தவறி விழுந்ததாக, பயணிகள் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சங்கர் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து தவறி விழுந்தாரா? வேறு ஏதும் காரணங்களா என்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
News April 27, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.25) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.8 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ ரூ.88 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-27) நடைபெற்ற கூட்டத்தில் கறிக்கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.