News March 20, 2024
நாமக்கல்லில் கவனம் ஈர்த்த சுயேட்சை வேட்பாளர்

நாமக்கல் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(மார்ச்.20) தொடங்கியது, அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனர் தலைவர், ரமேஷ் என்பவர் காந்தி வேடத்தில், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவர் டெபாசிட் செய்த 25 ஆயிரத்தை பத்து ரூபாய் நோட்டுகளாக ஒரு பையில் போட்டு தோளில் சுமந்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News April 14, 2025
நாமக்கல்லில் நாகம் நேரில் வழிபட்ட கோயில்!

நாமக்கல், பெரியமணலியில் நாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. நாகம் நேரில் வந்து இங்குள்ள மூலவரை வழிபட்டதால் இத்தல இறைவன் நாகேஸ்வரர் என அழைக்கப்படுவது சிறப்பு. இங்கு வந்து சிவனாரை வழிபட்டுப் பிரார்த்திக்க, நாக தோஷம் முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், திருமணத் தடை நீங்க, கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டிக் கொள்கின்றனர்.
News April 14, 2025
நாமக்கல்லில் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைவு!

நாமக்கல் நகர நகை வியாபாரிகள் சங்கம் நிர்ணயித்த இன்றைய (14.04.2025) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு. ஒரு கிராம் விலை ரூ.8,755-க்கும், ஆபரண தங்கம் 1 பவுன் ரூ.70,040-க்கும், முத்திரை காசு 1 பவுன் ரூ.70,500-க்கும், முத்திரை காசு 1 கிராம் ரூ.8,813-க்கும், விற்பனை வெள்ளி ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனையாகிறது.
News April 14, 2025
நாமக்கல்: லாரியில் தவிடு ஏற்றும்போது நேர்ந்த விபரீதம்!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பத்ரி மாத்தோ (45) நாமக்கல் காவேட்டிப்பட்டியில் உள்ள கோழித் தீவன ஆலையில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை, தவிடு மூட்டைகளை லாரியில் ஏற்றும்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த அவர், உயிரிழந்தார்.இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.