News April 29, 2025

நாமக்கல்லில் கத்தியுடன் சுற்றிய 4 பேர் கைது

image

நாமக்கல்: பலப்பட்டரை மாரியம்மன் கோயில் அருகே நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட இருந்த போது காரில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த பள்ளி காலனியை சேர்ந்த அஜய் பிரபாகர் (26), லோகேஸ்வரன் (32), குணசேகரன் (48), கிருபாகரன் (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர். விசாரணையில், மனைவியின் உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குணசேகரன் கத்தியுடன் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.

Similar News

News April 29, 2025

310 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் 

image

நாமக்கல் மாவட்டத்திலுள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினத்தன்று (மே.1) காலை 11.00 மணி அளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.இதில் கிராம நிர்வாகம் மற்றும் பொதுசெலவினம் குறித்து விவாதிக்கப்படும். இணையவழி மனைப்பிரிவு பட்டா மற்றும் கட்டட அனுமதி வழக்குதல்,வரி மற்றும் வரியில்லா வரியினங்களை இணையவழி செலுத்துதல் குறித்து விவாதிக்கப்படும் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

நாமக்கல்லில்  9 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில், தற்போது, 15 சதவீதம் மட்டுமே பசுமை பரப்பு உள்ளது. இதை, 33 சதவீதமாக அதிகரிக்கும் வகையில், தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பசுமை பரப்பை அதிகரித்தால் மட்டுமே, காலநிலை சீராக அமையும். நாமக்கல் மாவட்டத்தில், ஒன்பது லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News April 29, 2025

Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

image

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்துபுகார் அளிக்க வேண்டும். நாமக்கல்லில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!