News April 2, 2025

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்ட வானிலையை பொறுத்தவரையில், இன்று ஒரு மி.மீட்டரும், நாளை (வியாழன்) 5 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 7 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.6 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News April 4, 2025

நாமக்கல்: நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

நாமக்கல் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (ஏப்., 5ல்) காலை, 11:00 மணி முதல் 5:00 மணி வரை செயற்பொறியாளர், இயக்கமும் பராமரிப்பும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் மின் நுகர்வோர், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். நாமக்கல் மாவட்ட மக்கள் பயன்பெற இதை SHARE செய்யுங்கள்!

News April 4, 2025

நாமக்கல்லில் வேலை! APPLY NOW

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 10 காலிபணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இந்த <>பணிகளுக்கு இங்கு கிளிக்<<>> செய்து உடனே விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள் .

News April 4, 2025

நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா சரிவு

image

நாமக்கல் மண்டலத்தில், தொடர்ந்து உயர்ந்துவந்த முட்டை விலை, திடீரென 20 பைசா சரிவடைந்து ஒரு முட்டை விலை ரூ. 4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டதால், பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

error: Content is protected !!