News March 18, 2024

நாமக்கல் கொமதேக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சூர்யமூர்த்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 18, 2025

நாமக்கல் பேக்கரியில் குட்கா!

image

நாமக்கல்: பள்ளிப்பாளையம் அருகே செயல்பட்டு வரும் ஒரு பேக்கரியில் நேற்று(ஏப்.17) வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 2 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்து, பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டு, உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News April 18, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.14) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டு ஒரு கிலோ ரூ.86 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-17) நடைபெற்ற கூட்டத்தில் கறிக் கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News April 17, 2025

நாமக்கல் மக்கள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

image

▶️மாவட்ட ஆட்சித் தலைவர் 9444163000▶️காவல்துறை கண்காணிப்பாளர் 04286-281000▶️கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலை), நாமக்கல் 9597880099▶️ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் 04286-281341▶️மாவட்ட வருவாய் அலுவர் 9445000910 ▶️உணவு பாதுகாப்பு அலுவலர் 9994928758 ▶️ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் 9750912377..மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

error: Content is protected !!