News October 24, 2024
நாமக்கல் கவிஞர் மாளிகையில் விரிசல்

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், திடீரென கட்டடங்கள் முழுவதும் அதிர்ந்ததால் அரசு ஊழியர்கள் அனைவரும் தற்போது கட்டடங்களை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். 10 மாடிகளை கொண்ட அந்தக் கட்டடத்தில் அதிர்வு ஏற்பட்டு விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அச்சம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News August 5, 2025
1 மணி நேரத்தில் சென்னை To வேலூர் செல்லலாம்

சென்னையிலிருந்து 140 கி.மீ. தூரத்தில் உள்ள வேலூருக்கு காஞ்சிபுரம் வழியாக RRTS ரயில் சேவையை கொண்டுவர அரசு முடிவெடுத்துள்ளது. இது மெட்ரோ ரயிலைவிட 3 மடங்கு வேகம் கொண்டது. பாலாஜி ரயில் ரோடு என்ற நிறுவனம் அதற்கான சாத்தியக்கூறுகளை தயாரித்து வருகிறது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் சென்னை – காஞ்சிபுரம் 25 நிமிடத்திலும், சென்னை – வேலூர் 1 மணி நேரத்திலும் சென்றடைய முடியும். ஷேர் செய்யுங்கள்
News August 5, 2025
சென்னையில் ரயில்வே வேலை… சூப்பர் வாய்ப்பு

இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்- 5623, டிக்கெட் சூப்பர்வைசர்- 6235, ரயில் மேனேஜர்- 7367, அக்கவுண்ட் அசிஸ்டெண்ட்- 7520, கிளர்க்- 7367 என மொத்தம் 30,307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்திருந்தாலே போதும். ரூ.29,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் 30ஆம் தேதிக்கு மேல்தான் இந்த <
News August 5, 2025
சென்னையில் வெளுத்து வாங்கிய மழை…

மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 4) பரவலாக மழை பெய்தது. சென்ட்ரல், எழும்பூர், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, போரூர், ஈக்காட்டுத்தாங்கல், அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி, திருமுல்லைவாயல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. உங்க ஏரியாவில் மாலை பெய்ததா?