News April 22, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிப்பார். அதன்படி இன்று (22/04/2025) இரவு வந்து பணி அலுவலர்கள் விவரம் நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர்- பிரபாவதி (6380673283) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Similar News
News April 23, 2025
நாமக்கல்: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற விவசாயிகள் ஒவ்வொரு முறையும் நில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதை எளிதாக்க, தமிழ்நாடு அரசு வேளாண் அடுக்குத் திட்டத்தின் மூலம் அனைத்து விவரங்களையும் மின்னணுமயமாக்கி வருகிறது. எனவே, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் இ-சேவை மையங்களில் நில ஆவணங்களைப் பதிவு செய்து பயன்பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
News April 22, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.86-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.19) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.6 குறைக்கப்பட்டு ஒரு கிலோ ரூ.80 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-22) நடைபெற்ற கூட்டத்தில் கறிக் கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
News April 22, 2025
நாமக்கல்: முட்டை விலை 10 காசுகள் உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 395 காசுகளாக இருந்து வந்த நிலையில், இன்று (22.04.2025) நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.405 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.