News April 25, 2025
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சிறப்புகள்!

தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற அனுமன் கோயிலென்றால், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் தான். இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை, இந்தியாவில் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலைகளில் ஒன்றாக, 18 அடி உயரத்தில் ஒரே கல்லில் குடையப்பட்டதாகும். இந்த சிலை 5-ம் நூற்றாண்டில் குடையப்பட்டது என நம்பப்படுகிறது. இந்த ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். SHARE IT
Similar News
News April 26, 2025
நாமக்கல் மாவட்டம் முழுவதும் வெறிநாய்த்தடுப்பபூசி முகாம்

உலக கால்நடைகள் தினம் ஒவ்வோரு ஆண்டும் ஏப்ரல் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்படுவதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைகளிலும் வெறி நோய்த்தடுப்பூசி முகாம் இன்று காலை 8 மணி முதல் 12 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.
News April 25, 2025
முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (25-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.05 காசுகளாக நீடித்து வருகிறது. கடந்த (ஏப்ரல் 22) முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.05 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.
News April 25, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.8 உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இன்று (ஏப்.25) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.8 உயர்த்தப்பட்டு, ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.88 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.