News February 17, 2025
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம்

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. தமிழ் மாத மாசி முதல் திங்கள்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. காலை 10:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு பால் உள்ளிட்டஅபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றன பின்தங்ககவச அலங்காரத்தில் காட்சி தந்தார். இதில் பல்வேறு மாவட்ட பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஆஞ்சிநேயரை வழிபட்டனர்.
Similar News
News August 9, 2025
நாமக்கல்: ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கல் வழியாக செல்லும் 20671/20672 மதுரை – பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயில் நாளை(ஆக.10) ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் நாமக்கலில் (செவ்வாய் தவிர மற்ற நாட்கள்) காலை 8:30 மணிக்கு 20671 பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயிலும், மாலை 5:25 மணிக்கு 20672 மதுரை வந்தேபாரத் ரயிலும் செல்லும்.
News August 9, 2025
நாமக்கல்: ரூ. 1 லட்சம் போட்டா ரூ.2 லட்சம்..! CLICK

நாமக்கல் மக்களே..,நீண்ட கால முதலீட்டில் அதிகபட்ச வட்டி வருமானத்தை தரக்கூடிய ஓர் சூப்பர் திட்டம் ’கிசான் விகாஸ் பத்ரா(KVP)’. தபால் நிலையத்தின் சேம்பித் திட்டமான இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். ஆக, ரூ.1 லட்சம் செலுத்தினால் எடுக்கும் போது அதே பணம் ரூ.2 லட்சமாகிவிடும். இதுகுறித்த விவரங்கள், முதலீடு செய்ய அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும். உடனே SHARE
News August 9, 2025
நாமக்கல்லில் ’அக்னி வீரர்’ ஆள்சேர்ப்பு

நாமக்கல்: தமிழகம், புதுச்சேரியில் இருந்து இந்திய விமானப்படைக்கு ‘அக்னிவீரா்’ ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கான ஆள்சேர்ப்பு முகாம், சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் செப். 2ஆம் தேதி முதல் ஆண்களுக்கும், 5ஆம் தேதி முதல் பெண்களுக்கும் நடைபெற உள்ளது. இதில், தகுதியுள்ள ஆண்கள், பெண்கள் பங்கேற்று பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.