News March 17, 2025

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி பகுதியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. இதனை இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News March 18, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க…

image

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக, குழந்தைகளுக்கு(6 மாதம் முதல் 6 வயது வரை) விட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்கள், மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கு, விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 – மார்ச் 22 வரை நடைபெறுகிறது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.

News March 18, 2025

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் செம்மணங்கூரை சேர்ந்தவர் கவியரசு. திருச்சியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டார். இதில், கர்ப்பமான சிறுமிக்கு கடந்த 10ம் தேதி திருச்சியில் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், கவியரசு மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News March 18, 2025

குளத்தில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சரத்குமார்( 9). அரசு நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இவர், அவரது நண்பருடன், அருகில் உள்ள குளத்தில் குளித்துள்ளனர். ஆழமான பகுதிக்கு சென்ற சரத்குமார் திடீரென நீரில் மூழ்கினார்.  அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே இறந்தார். ரிஷிவந்தியம் போலீஸ் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!