News April 13, 2025
நாகை: ராணுவ ஆட்சேர்ப்பு கடைசி தேதி நீட்டிப்பு

அக்னி வீர் இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது. இதற்கான கடைசி தேதி தற்போது ஏப்ரல் 25 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்திய ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய இளைஞர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி தலைவர் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News April 15, 2025
திருக்குவளைக்கு 16ஆம் தேதி ஆட்சியர் விசிட்

திருக்குவளை வட்டத்தில் 16.4.2025 அன்று உங்கள் ஊரில் உங்கள் முதல்வர் திட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை திருக்குவளைக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வருகை தருகிறார். அப்போது திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் அவரை சந்தித்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுத்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 15, 2025
26 துணை அஞ்சலகங்களில் ஆதார் முகாம்

நாகை மற்றும் திருவாரூர் தலைமை அஞ்சலகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் 26 துணை அஞ்சலகங்களிலும் ஆதார் திருத்த சிறப்பு முகாம் வருகிற 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆதார் திருத்தம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படுவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நாகை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் கேட்டு கொண்டுள்ளார்.
News April 15, 2025
நாகையில் சத்துணவு பணியிடங்களுக்கு வேலை, ஆட்சியர் அழைப்பு

நாகை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என நாகை ஆட்சியர் பா.ஆகாஷ் தெரிவித்துள்ளார். காலியாக உள்ள 93 சமையல் உதவியாளர் பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது தோல்வி, தமிழ் சரளமாக பேச வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. Share செய்யுங்கள்