News September 19, 2024
நாகை அருகே கடலில் விழுந்த மீனவர் பலி
வேதாரண்யம் தாலுகா, வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மீனவர் மாரியப்பன் (53). இவர் நேற்று முன்தினம் புஷ்பவனத்திற்கு கிழக்கே சுமார் 10 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்துள்ளார். அப்போது எஞ்சின் புரொபெல்லரில் சிக்கி கழுத்து மற்றும் தோள்பட்டையில் வெட்டு விழுந்ததில் மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 20, 2024
நாகை ஏடிஎஸ்பி, டிஎஸ்பி இடமாற்றம்
நாகப்பட்டினம் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.செல்வகுமார் சென்னை ஊனமஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அகாடமிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைப்போல், நாகப்பட்டினம் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் துணை கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
News November 20, 2024
நாகை மாவட்டத்தில் கனமழை வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் வரும் நவ.26 ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும். SHARE NOW!
News November 20, 2024
நாகை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
நாகையில் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து விடுமுறை குறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவெடுத்துக்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி அறிவித்துள்ளார். ஆட்சியரின் அறிவுரையை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.