News October 23, 2024
நம்ம மலைக்கோட்டைக்கு ஒரு பில்லியன் வயது

திருச்சியின் முக்கிய அடையாளமாக திகழ்வது மலைக்கோட்டை. திருச்சியை மலைக்கோட்டை மாநகர் என்றழைக்கும் அளவுக்கு பெருமையும், சிறப்பும் மிக்கதாக திகழும் மலைக்கோட்டை அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது. நிலவியல் அடிப்படையில், இப்பாறை ஒரு பில்லியன் (100 கோடி) ஆண்டுகளுக்கு பழமையானது. மேலும் கீழே மாணிக்க விநாயகர், மேலே உச்சிப்பிள்ளையார், இடையே தாயுமானவர் என 3 சாமிகள் அமைந்துள்ளன. ஷேர் செய்யவும்
Similar News
News April 30, 2025
திருச்சி மைய நூலகத்தில் கவிதை ஒப்புவித்தல் போட்டி

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 135வது பிறந்த நாளையொட்டி, மைய நூலகத்தில் மே 4ம் தேதி ஞாயிறு காலை 10 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு “பாரதிதாசனின் கவிதை ஒப்புவித்தல் போட்டி” நடக்கிறது. இதில் 6 – 12ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம். முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே ரூ.500, ரூ.300, ரூ.200 பணப்பரிசு, பாரதிதாசன் கவிதை நூல் பரிசாக வழங்கப்படும்.
News April 29, 2025
திருச்சி: பெண்களுக்கான இலவச ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி

திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து பெண்களுக்கான 30 நாள் இலவச எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. குறைந்தது 8-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட 18-40 வயதுடைய பெண்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இதன் மூலம் மாதம் ரூ.15,000 வருமான கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 02/05/25 ஆகும். தொடர்புக்கு: 8903363396.
News April 29, 2025
திருச்சி: முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

திருச்சி மாவட்ட மக்கள் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்: திருச்சி எஸ்.பி- 0431-2333603, திருச்சி போலீஸ் கமிஷனர்- 0431-2332566, முசிறி டி.எஸ்.பி- 9498162695, மணப்பாறை டி.எஸ்.பி – 9443659745, லால்குடி டி.எஸ்.பி – 9498160648, திருவெறும்பூர் டி.எஸ்.பி- 9866246303, மாவட்ட குற்றப் பிரிவு- 9498178817, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு- 9498167714. மறக்காம SHARE செய்யவும்