News April 21, 2025
நம்பிக்கை தரும் நாமக்கல் காலபைரவர்

நாமக்கல் மாவட்டம் அடுத்த அணியாபுரத்தில் அமைந்துள்ளது காலபைரவர் கோயில். மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Similar News
News April 21, 2025
முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (21-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.3.95 காசுகளாக நீடித்து வருகிறது. நேற்று (ஏப்ரல் 20) முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.3.95 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.
News April 21, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.86-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.19) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.6 குறைக்கப்பட்டு ஒரு கிலோ ரூ.80 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-21) நடைபெற்ற கூட்டத்தில் கறிக் கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
News April 21, 2025
நாமக்கல்: ஏமாற்றப்பட்டவர்கள் வழிபடும் கோயில்!

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நாவலடி கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் எல்லா நாளுமே சுவாமிக்கு விசேஷ வழிபாடுகள் நடக்கிறது. எனவே, இவருக்கென தனியே விழா எதுவும் கிடையாது. இவரிடம் வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் தொடர்ச்சியாக படையல் படைத்து வழிபடுகின்றனர். எனவே, இவருக்கு ‘படையல்சாமி’ என்றொரு பெயரும் உண்டு. இங்கு பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள் அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். SHARE IT!