News October 24, 2024

நத்தம் அருகே தீ விபத்து

image

திண்டுக்கல், நத்தம், வேலம்பட்டியில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி மற்றும் மொத்த விற்பனை கடை உள்ளது. இந்நிலையில் இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் துணிகள் மற்றும் தயாரிப்பு பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், தீயை பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 9, 2025

திண்டுக்கல்லில் 12வது புத்தக கண்காட்சி அழைப்பு

image

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 7 ந்தேதி வரை மாபெரும் புத்தக கண்காட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தவறாமல் அனைவரும் இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News August 9, 2025

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் (ஆக.8) இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல்,ஆத்தூர், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை,பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News August 8, 2025

திண்டுக்கல்: ரூ.50,925 சம்பளத்தில் வேலை!

image

மத்திய அரசு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி (NIACL), இந்தியா முழுவதும் 550 நிர்வாக அதிகாரி (Administrative Officer) பணியிடங்களை நிரப்பப்டுள்ளது. மாத ஊதியமாக ரூ.50,925 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (07.08.2025) முதல் (30.08.2025) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் <>www.newindia.co.in <<>>இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!