News March 11, 2025
தொழிலாளர்கள் போராட்டம்: எம்எல்ஏ ஆதரவு

இச்சிப்புத்தூரில் இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையில் வைத்து இரண்டாவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ ரவி ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது அதிமுக ஒன்றிய செயலாளர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Similar News
News April 30, 2025
அட்சய திருதியை: தங்கம் வாங்க போறிங்களா?

அட்சய திருதியையான இன்று (ஏப்ரல் 30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். அதுவும் மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். உங்கள் வீட்டின் அருகில் உள்ள லட்சுமி, பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு வாங்குவது நல்லது. காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம். இல்லாவிட்டாலும் கல் உப்பாவது வாங்கிவிடுங்கள். ஷேர் பண்ணுங்க.
News April 30, 2025
இராணிப்பேட்டை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (ஏப்ரல்.29) இரவு பாதுகாப்பு பணிக்கான ரோந்து நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் பகுதிகளில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறை மற்றும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாகும். அவசர தேவைக்காக இவை பயனுள்ளதாக இருக்கும்.
News April 30, 2025
டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்

மே1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீறி டாஸ்மாக் அரசு மதுபான கடைகள் திறந்தால் மேற்பார்வையாளர், விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மதுக் கூடத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.