News December 4, 2024

தொண்டி அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து; ஓட்டுநர் காயம்

image

திருவாடானை தாலுகா பெருமானேந்தல் கிராமத்தில் இன்று(டிச.03) மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கிணறு உரைகளை ஏற்றி கொண்டு சென்ற மினி லாரி ஒரு வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி அருகில் இருந்த சாலை பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மினி லாரி டிரைவருக்கு காயமடைந்த நிலையில், அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

Similar News

News August 8, 2025

ராம்நாடு: 12th படித்தால் ரூ.15,000 சம்பளம்!

image

ராமநாதபுரத்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு நிர்வாகி பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும். முன் அனுபவம் தேவையில்லை. ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபருக்கு உடனே ஷேர் செய்து உதவுங்கள்.

News August 8, 2025

முதுகுளத்தூர் அரசு ஐடிஐ-இல் சேர்க்கை ஆரம்பம்

image

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் பயிற்சியாளர்களின் 2025ஆம் ஆண்டுக்கான சேர்க்கை ஆரம்பித்துள்ளது. இதற்காக துண்டு பிரசுரங்களை செங்கப்படை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் நேரடியாக கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

News August 8, 2025

ராம்நாடு விவசாயிகள் மானியம் பெற ஆட்சியர் அழைப்பு

image

2025-26ம் ஆண்டு தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி கால்நடை விபரம், தீவன சாகுபடி விபரம், நில சர்வே எண் கூடிய விண்ணப்பத்தினை சமர்பித்து பயன் பெறலாம் என ஆட்சியர் சிம்ரன் ஜித் கூறியுள்ளார்.

error: Content is protected !!