News May 20, 2024
தொடர் மின்தடையால் மக்கள் அவதி

காஞ்சிபுரம் மாநகராட்சி பஞ்சுப்பேட்டை பகுதிகளில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தில் 110 கே.வி கொள்ளளவு உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் பழுது காரணமாக காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு 2 மணி நேரம் மின்சார துண்டிப்பு ஏற்பட்டது. மின் ஊழியர்களால் சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால், விரைவில் மின்சார வழங்கப்படும் என மின்சார துறை அலுவலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2025
மனித உரிமையை நிலைநாட்டக்கூடியது: முதல்வர்

குன்றத்தூரில் நேற்று (ஏப்ரல் 19) நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “தமிழ்நாட்டின் அனைத்து கைவினைக் கலைஞர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ள கலைஞர் கைவினைத் திட்டம், சமூகநீதி, மனித உரிமை ஆகியவற்றை நிலைநாட்ட கூடியது” என தெரிவித்தார். மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3ஆவது இடத்தில் உள்ளது” என்றார்.
News April 20, 2025
காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

▶வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27256090, ▶குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-24780449, ▶உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27272230, ▶ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27162231, ▶காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27222776, ▶ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் – 9444964899, ▶காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் – 9445000413. ஷேர் செய்யுங்கள்.
News April 20, 2025
ரூ.170 கோடி கடனுக்கு ஆணை வழங்கிய முதல்வர்

குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நேற்று (ஏப்ரல் 19) அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து, 8,951 பயனாளிகளுக்கு ரூ.34 கோடி மானியத்துடன் ரூ.170 கோடி கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கி சிறப்பித்தார்.