News April 25, 2025

தொடர் குற்றச்செயல்- குண்டர் சட்டத்தில் பெண் கைது!

image

சேலம் மாநகரில் பொதுவிநியோகத் திட்ட அரிசிக் கடத்தி தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த பரிமளா என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது காவல்துறை. இதையடுத்து அவர் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News April 25, 2025

சேலம் மதுக்கடைகளை  மூட உத்தரவு 

image

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபான கடைகள், பார்கள், மன மகிழ் மன்றங்கள் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி மே தினத்தை முன்னிட்டு  கண்டிப்பாக மூடவேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி உத்தரவு விடுத்துள்ளார். மீறி திறந்தால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 25, 2025

சேலம் : திருமண தடை நீக்கும் அற்புத கோயில்

image

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக பத்ரகாளியம்மன் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், குடும்ப பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 25, 2025

மாவட்டத்தில் கூடுதலாக மூன்று தீயணைப்பு நிலையங்கள்

image

சேலம் மாவட்டத்தில் 15 இடங்களில் தற்போது தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அயோத்தியாபட்டினம், பெத்தநாயக்கன்பாளையம், மற்றும் தலைவாசல் ஆகிய மூன்று இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதை அரசு பரிசீலித்து அறிவிப்பை வெளியிடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

error: Content is protected !!