News April 4, 2024
தேர்தல் பொது பார்வையாளர் தலைமையில் கூட்டம்

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக அரங்கில், நீலகிரி பாராளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கணினி மூலம் இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணிகள் இன்று நடைபெற்றது. நீலகிரி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சித் சிங் பரார் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா முன்னிலையில் நடைபெற்றது.
Similar News
News April 20, 2025
நீலகிரி: சாலை விபத்தில் ஒருவர் பலி!

நீலகிரி, நிலக்கோட்டை, சுல்தாம்பத்தேரி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மாலை கேரள மாநிலம் தலச்சேரியை சேர்ந்த 2 இளைஞர்கள் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த அரசு பேருந்தில், பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும், மற்றவர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து, நிலக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 19, 2025
தீராத நோயை தீர்க்கும் கோத்தகிரி கோயில்!

நீலகிரி, கோத்தகிரி அருகே பிரசித்தி பெற்ற வெற்றிவேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக வெற்றிவேல் முருகன் இடது பாகத்தில் மயில் பீலியுடன் அபூர்வமாக வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் தீராத நோய், குடும்ப பிரச்சனை, நீதிமன்ற வழக்கு போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. குடும்ப பிரச்சனையில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 19, 2025
நீலகிரி: ரூ.20 கோடியில் உள்கட்டமைப்பு அமைச்சர்

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டார். அதில் நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள பைக்காரா உள்கட்டமைப்பு வசதி ரூ.20 கோடியில் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.