News April 8, 2024
தேர்தல் பணிக்கு, ஓய்வு பெற்ற காவலர்களுக்கு அழைப்பு

மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள ஓய்வு பெற்ற காவலா்கள், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் தலைவா் போஸ், பொதுச்செயலா் குமரவேல், பொருளாளா் ராஜா சந்திரசேகா் ஆகியோரைத் தொடா்பு கொண்டு, வருகிற 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு ஊதியம் வழங்கபடும் என்பது குறிப்பிடத்தக்கது
Similar News
News April 19, 2025
மதுரை: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*
News April 19, 2025
மதுரை வந்தடைந்த கவிஞர் வைரமுத்து

மதுரையில் நடைபெறும் நிகழ்விற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த கவிஞர் வைரமுத்துவிற்கு மதுரையைச் சேர்ந்த வைரமுத்து ரசிகர் மன்றத்தினர் சால்வை அணிவித்து வரவேற்பு வழங்கினர். தொடர்ந்து வைரமுத்துவிற்கு புத்தகங்கள் பரிசாக வழங்கினர். மதுரையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்ட பிறகு சென்னைக்கு நாளை புறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News April 19, 2025
போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி

மதுரை, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் போலீஸ் எஸ்-ஐ தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 23ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது. விரும்புவோர் ஆதார் அட்டை மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் வேலைவாய்ப்பு மையத்தை நேரில் அனுகவும். தங்களது சுய விவரங்கள் பதிவேற்றம் செய்து பாடக்குறிப்புகளை இந்த <