News March 21, 2024
தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது?

தமிழகம், புதுவையில் எம்பி தேர்தல் ஏப்.19இல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றன. அந்த வகையில், கூட்டணியே அமைக்காமல் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியலை மார்ச் 23ஆம் தேதி சீமான் வெளியிடுவார். அதன்படி திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக மு.ஜெகதீஷ் சந்தர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 8, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் ஏப்ரல் 12 ஆம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான குறைகளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்
News April 7, 2025
திருவள்ளூர் மாவட்ட மக்கள் குறைத்தீர் கூட்டம் நிறைவு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஏப்ரல் 07) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை தாங்கி கலந்து கொண்டார். அப்போது, பொதுமக்களிடமிருந்து 772 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
News April 7, 2025
அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 301 அங்கன்வாடி பணியிடங்கள், 68 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 23ஆம் தேதிக்குள் இந்த <