News March 20, 2025

தேனியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (மாா்ச்.21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 98948 89794 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 29, 2025

தேனி: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 28.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News March 28, 2025

தேனி: குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை அறிவிப்பு

image

தேனி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Social Worker பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வேலை செய்யும் இடம் தேனி. விண்ணப்பிக்க கடைசி நாள் 10-04-2025. தகுதியான நபர்களுக்கு Rs.18,536 வரை சம்பளம் கிடைக்கும். விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். *ஷேர் பண்ணவும்*

News March 28, 2025

ஆண்டிபட்டியில் பைக்கில் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

image

தேனி, ஆண்டிபட்டி காவல் நிலையம் போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (மார்.27) ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது மதுரை சாலையில் பைக்கில் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த முருகன், தெய்வேந்திரன் ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பைக்கில் அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 15,000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!