News March 29, 2025

தேனியில் குற்றவாளி மீது துப்பாக்கிச்சூடு

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற போலீசார் ஒருவரை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் பதுங்கி இருந்த பொன்வண்ணன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News April 2, 2025

தேனியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று(ஏப்.2) முதல் ஏப்.4 வரை தேனி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 2, 2025

தேனி : இலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி

image

தேனியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் ஏப்ரல்28 முதல்
(30 நாட்கள்) இலவச செல்போன் பழுது நீக்குதல் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். இது குறித்து சந்தேகங்களுக்கு 94427 58363 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் . சுய தொழில் தொடங்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News April 2, 2025

பெரியகுளம் : கர்ப்பத்தை கலைக்க கூறிய கணவர்

image

பெரியகுளத்தை சேர்ந்தவர் ஸ்வானிகா (25). இவரும் இவரது கணவர் கவின்பிரசாத்தும் துபாயில் பணி செய்து வந்தனர். அங்கு ஸ்வானிகா கர்ப்பமானர். கணவர் கவின்பிரசாத் கர்ப்பத்தை கலைக்க கூறியுள்ளார். இதனால் ஸ்வானிகா பெரியகுளத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி உள்ளார். அப்போது கவின்பிரசாதின் தாயார் கீதாராணி கருக்கலைப்பு மாத்திரையை உண்ண வற்புறுத்தியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!