News April 13, 2025
தேனி: வாழ்வில் திருப்பம் தரும் முருகன் கோவில்

தேனியில் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இந்த கோவிலில் தமிழ் புத்தாண்டு அன்று வழிபட்டால் முருகனின் அருள் மிகச் சிறப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம்.பக்தர்கள் அனைவருக்கும் SHARE செய்யுங்க
Similar News
News April 16, 2025
வீரபாண்டி திருவிழா நடைபெறும் நாட்கள்

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி மே 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 6ல் அம்மன் புறப்பாடு, மே 7ல் அம்மன் பவனி, மே 8 புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி, மே 9 அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல், மே 10 தெற்கு ரத வீதியில் ரத உற்சவம், மே 11 மேற்கு ரத வீதியில் ரத உற்சவம், மே 12 திருத்தேர் நிலைக்கு வருதல் நிகழ்ச்சி, மே 13 ஊர் பொங்கல் நடைபெற உள்ளது. ஷேர் செய்யவும்
News April 16, 2025
ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தேனி மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
News April 16, 2025
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

உத்தமபாளையம் அருகே ராமசாமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே சென்ற போது அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.