News October 24, 2024
தேனி மாவட்டத்தில் நீண்ட நேரமாக வட்டமடிக்கும் விமானம்

சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையத்தில் இன்று(அக்.24) மாலை தரையிறங்க இருந்த இரண்டு இண்டிகோ விமானங்கள் மழையின் காரணமாக நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மதுரை அருகே உசிலம்பட்டி, தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. மழை நின்ற பிறகு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 6, 2025
தேனி: இரவு நேர ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

தேனி மாவட்டத்தில் 06.08.2025 இரவு 10 மணி முதல் 07.08.2025 காலை 6 மணி வரை பெரியகுளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் நல்லு தலைமையில் இரவு ரோந்து பணி நடைபெறுகிறது. மாவட்ட காவல்துறை நிர்வாகம், ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்களை அறிவித்துள்ளது. பொதுமக்கள் தேவைப்படும்போது உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவி பெறலாம். *ஷேர்*
News August 6, 2025
தேனியில் கூட்டுறவு சங்கங்களில் வேலை

தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர், எழுத்தாளர் பிரிவில் 31 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ரூ.10900-ரூ.62000 வரை உதியம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் www.drbtheni.net என்ற இணையதளம் மூலம் ஆக.29 க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை <
News August 6, 2025
தேனி: ஆகஸ்ட்.7ல் சிறப்பு கைத்தறி கண்காட்சி

ஆகஸ்ட்.7ம் தேதி நாடு முழுவதும் தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கைத்தறித்துறையின் சார்பில், தேனி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிகிழமை சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைக்க உள்ளார்கள். இக்கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 5 வரை நடைபெற உள்ளது. இதில் கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட ரகங்கள் அரசு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.