News September 14, 2024
தேனி மாவட்டத்தில் நடந்த குரூப் 2 தேர்வு விவரம்

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தாலுகாவில் -9 தேர்வு மையம், உத்தமபாளையம் -15, தேனி -28 என 3 தாலுகாக்களில் 52 தேர்வு மையங்களில் 15,004 பேர் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு எழுத இருந்தனர். ஆனால் இன்று நடந்த குரூப் 2 தேர்வில் 11,279 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். மீதம் 3725 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 5, 2025
தேனியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

தேனி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News August 5, 2025
மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க வலைதளம் அறிவிப்பு

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களின் சிறார்கள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்யும் KSB Portal-ல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2025-26ஆம் கல்வியாண்டிற்கு MBBS / BDS மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Website – www.desw.gov.in மற்றும் DGR Website – www.dgrindia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
News August 4, 2025
தனிநபர் திட்ட தொகை வழங்க புதிய திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் என்ற புதிய திட்டத்தில் தனிநபர் திட்ட தொகை வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் www.newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 04546-260995, 9445029480 என்ற தாட்கோ அலுவலக தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.