News March 23, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 23.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.*இரவில் வெளியே செல்லும் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவவும்*

Similar News

News March 26, 2025

தனி அடையாள எண் பெற 28,974 விவசாயிகள் பதிவு

image

தேனி மாவட்டத்தில் 50,189 விவசாயிகள் உள்ளனர். அவர்களில் தாலுகா வாரியாக தேனி 2,839, ஆண்டிபட்டி 6,904, பெரியகுளம் 5,496, போடி 4,577, உத்தமபாளையத்தில் 9,158 என மொத்தம் 28,974 விவசாயிகள் தனி அடையாள எண் வழங்குவதற்காக நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் பதிவு செய்துள்ளனர். மார்ச்.31 க்குள் மீதமுள்ள விவசாயிகள் சிறப்பு முகாம்களில் பதிவு செய்து கொள்ளுமாறு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News March 26, 2025

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

image

பெரியகுளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில்  தென்கரை போலீசார் அவரை 2023 ஆம் ஆண்டு கைது செய்த நிலையில் வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News March 25, 2025

தேனி : ரூ.50,000 வருமானம் தரும் தொழில் ஐடியா

image

தேனியில் சுய தொழில் செய்ய பெண்கள் ஆர்வமாக உள்ளனர். வீட்டில் இருந்தபடியே செய்யும் தொழில்தான் காளான் வளர்ப்பு. வீட்டிலேயே குடில் அமைத்து காளான் வளர்த்து விற்பனை செய்யலாம். . அதேபோல உற்பத்தி செய்யப்பட்ட காளானிலிருந்து மதிப்புகூட்டப்பட்ட பொருட்களான காளான் மால்ட் , காளான் தோசை பொடி ,காளான் முறுக்கு போன்ற பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் மாதம் 50,000 வரை வருமானம் பெற முடியும் .

error: Content is protected !!