News April 15, 2025
தேனி பெண்களுக்கு அரிய வாய்ப்பு

தேனியில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் மே7 முதல் மே 20 வரை பெண்களுக்கென இலவச சணல் பை தயாரித்தல் பயிற்சி முகாம் நடக்க உள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-24 வயது உடையோர் கலந்து கொள்ளலாம் . இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள 04546- 251478, 9442758363 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சுய தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Similar News
News April 17, 2025
தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.17) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 17, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 17) நீர்மட்டம்: வைகை அணை: 56.30 (71) அடி, வரத்து: 110 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 97.74 (126.28) அடி, வரத்து: 16.88 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 38.90 (52.55) அடி, வரத்து: 5 க.அடி, திறப்பு: இல்லை.
News April 17, 2025
போடி அருகே கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

போடி அருகே ராசிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (42). இவர் நேற்று (ஏப்.16) அப்பகுதியில் உள்ள சாலையின் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக கார் ஒன்று இளங்கோவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.